ஆளுமை:மிக்கோர்சிங்கம், யேம்சிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மிக்கோர்சிங்கம்
தந்தை யேம்சிங்கம்
பிறப்பு 1957.04.16
ஊர் பாசையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மிக்கோர்சிங்கம், யேம்சிங்கம் (1957.04.16 - ) யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை யேம்சிங்கம். இவர் தனது 13 ஆவது வயதிலிருந்து இசைநாடகம், நாட்டுக்கூத்து, வசன நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்ததுடன் சங்கிலியன், அருளானந்தர், பண்டார வன்னியன், கட்டப்பொம்மன், புனிதவதி, 1970 இல் புனித அந்தோனியார் 1989 இல் புனித செபஸ்ரியார், நிலவும் நெருப்பும், வேங்கையின் வெற்றி, குருதியில் மலர்ந்த அன்பு மறை, விக்ரமாதித்தன், ஞானசவுந்தரி, ஆளப்பிறந்தவன், தீர்க்கசுமங்கலி ஆகியன உட்பட 28 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 210