ஆளுமை:மாலா, சபாரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாலா
தந்தை சபாரட்ணம்
தாய் ராஜலக்‌ஷ்மி
பிறப்பு 1943.11.21
ஊர் அச்சுவேலி
வகை சட்டவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலா, சபாரட்ணம் (1943.11.21 -) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த சட்டவியலாளர். இவரது தந்தை சபாரட்ணம்; தாய் ராஜலக்‌ஷ்மி. இவர் யாழ்ப்பாணம் வேம்படி உயர்தரக் கல்லூரியிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இலங்கை இலவசச் சட்ட உதவிச் சங்கம், கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவச் சபை என்பனவற்றில் உறுப்பினராகவும் இலங்கை வங்கியில் நீதி உத்தியோகத்தராகவும் செலிங்கோ வர்த்தக ஒன்றியத்தில் செலிங்கோ வங்கி உள்ளிட்ட சகல நிறுவனங்களின் பிரதான சட்ட நிர்வாகியாகவும் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக 71 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த சர்வதேச மகளிர் அமைப்பான Zonta நிறுவனத்தின் இந்திய, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுனராக விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 64-71
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாலா,_சபாரட்ணம்&oldid=514600" இருந்து மீள்விக்கப்பட்டது