பெயர் | மாலதி, சிவகுமார் |
தந்தை | தர்மா |
பிறப்பு | 1952 |
ஊர் | காரைநகர் |
வகை | ஆசிரியை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாலதி, சிவகுமார் (1952 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் காரைநகர், வலந்தலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை. இவரது தந்தை தர்மா. இவர் ஆரம்பக் கல்வியை இலகடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி உயர்தரக் கல்லூரியில் கற்று மேற்படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பட்டதாரியாகப் பெற்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட பயிற்சி ஆசிரியையானார்.
இவர் பரத நாட்டியத்தை 8 வருடங்கள் பயின்று டிப்ளோமாப் பட்டக் பெற்று 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வழுவூர் இராமையா முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். இவருக்கு வழுவூராரால் 'நாட்டிய கலா சிகாமணி விருது வழங்கப்பட்டது. இதுவே காரைநகர் வரலாற்றில் முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றமாகும்.
1975 ஆம் ஆண்டு தொடக்கம் காரை இந்துக் கல்லூரி, யாழ்டன் கல்லூரி, மாத்தளை பாக்கிய வித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியையாகவும் கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பின் கொழும்பு வலயக் கல்வித் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் பரத நாட்டிய பாடத்தில் அரச பிரதம பரீட்சகராகப் பல ஆண்டுகள் சேவை செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 338-339