ஆளுமை:மாலதி, ஜெயநாயகன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாலதி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலதி, ஜெயநாயகன் யாழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை கதிர்காமத்தம்பி. யமன் வேலாயுதம் என அழைக்கப்படும் நாடகக் கலைஞரின் பேத்தியுமாவார். நெல்லியடி மத்திய மகா வி்த்தியாலயத்தில் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றார். நடனக்கலையை ஆரம்பத்தில் ஜெயலஷ்மி கந்தையாவிடம் பயின்று பின்னர் திருமதி சுபத்திரா சிவதாசனிடம் பயின்றார். இவரின் அரங்கேற்றம் இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைத்துறையில் நாட்டியகலைமணி பட்டம் பெற்றார். நடன ஆசிரியராக கடமையாற்றிய இவர் 1991ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். கரோயிடம் தமிழ் பாடசாலையிலும் சிவன்கோவில் தமிழ் பாடசாலையிலும் அருணோதயம் தமிழ் பாடசாலையிலும் நடன ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். இவர் சலங்கை நாதம் என்னும் நாட்டிய பள்ளியை 25 வருடங்களாக நடத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் offal நடத்தும் பரீட்சையில் நாட்டிய கலாஜோதி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அரங்கேற்றம் செய்தள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று பரீட்சையாளராகவும் நடன போட்டிகளுக்கு நடுவராகவும் கடமையாற்றியுள்ளார். ஆதிபராசக்தி பத்மாசுரவதம், நளன்தமயந்தி, ஏகலைவன், கர்ணன் போன்ற பல நாட்டிய நாடகங்களையும் பல நடன உருப்படிகளையும் நடன அமைப்பு செய்தவர். லண்டனில் 29 வருடங்களாக நடன ஆசிரியராக கடமை ஆற்றிவருகிறார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாலதி,_ஜெயநாயகன்&oldid=390787" இருந்து மீள்விக்கப்பட்டது