ஆளுமை:மார்க், அ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மார்க்
பிறப்பு
ஊர் குருநாகல்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்க், அ. குருநாகலைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்தில் ஆர்வம்கொண்ட இவர், தனது 20 ஆவது வயதில் அரசாங்க நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடங்கள் பயிற்சி பெற்றார். இவர் ஹாட்லிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக நியமனம் பெற்று அதிபர் பூரணம்பிள்ளையின் உதவியுடன் பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தினார்.

இவரது ஓவியங்கள் கொழும்பு கலாபவனத்தில் 1958 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. இவர் வரைந்த சிவ நடனத்தின் வேகம், கண்ணகியின் கோபாக்கினி என்பன ஒத்திசைவையும் வேகத்தையும் புலப்படுத்துகின்றன.

இவரது ஓவியங்கள் 1958 இல் கவர்னர் ஜெனரல் பரிசையும் 1957 இல் ஒப்சேவர் பரிசையும் பெற்றது. இவர் கலாபவனக் கண்காட்சியில் அடிக்கடி சிறந்த ஓவியருக்கான பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 142-145
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மார்க்,_அ.&oldid=196489" இருந்து மீள்விக்கப்பட்டது