ஆளுமை:மாதவி, உமாசுதசர்மா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதவி
தந்தை உமாசுதசர்மா
தாய் ரஜனி
பிறப்பு 1998.06.22
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதவி, உமாசுதசர்மா (1998.06.22) யாழ்ப்பாணம், கோண்டாவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை உமாசுதசர்மா; தாய் ரஜனி. இவரது தாய்வழித் தாத்தாவான சோமாஸ்கந்த சர்மா அவர்கள் இசையில் மிகவும் புலமை வாய்ந்தவர். இவர் தென்னிந்திய பாடகர் சீர்காழி அவர்களுடன் ஒன்றாக மேடையில் பாடியுள்ளார். மேலும் நல்லூர் உற்சவ காலங்களில் இடம் பெறும் கச்சேரிகளிலும் மிருதங்க கலைஞராகப் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் வழிப் பாட்டனார் சிவஶ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமயப் பெரியார். எழுத்தாளர் மாதவி கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பதினொரவது வயதில் எழுத்துத்துறைக்கு நல்லூர் பிரதேச சபை நடாத்திய கவிதைப் போட்டியில் (2009) ”பூ வதங்குது” எனும் கவிதையை எழுதி இலக்கிய உலகில் பிரவேசித்துள்ளார். இவரது கவிதை முதலில் உதயன் பத்திரிகையின் தைப்பொங்கல் மலரில் "நதியின் குரல் இது " எனும் தலைப்பில் (2018) பிரசுரிக்கப்பட்டது. கட்டுரைகள், சிறுவர் கதை, கவிதைகள், ஆங்கில புனைக்கட்டுரையாக்கம். நாடகம், பண்ணிசை, பாவோதல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர் மாதவியின் ஆக்கங்கள் உதயன், வலம்புரி, புதுவிதி முதலிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் நடித்த ”கூடிவாழ்வோம்” (2008), ”பஞ்சவர்ண நரியார்” (2007) ஆகிய நாடகங்கள் மாகாண மட்டத்தில் பரிசில் பெற்றுள்ளன. தாயகம், வளரி (10ஆவது ஆண்டு மலர்) கொக்கூர் சுட்டி, நல்லை குமரன் (26ஆவது மலர்) இந்து இளைஞர் மாநாட்டு மலர் (2018), நித்திலம், சாரதி, தேமதுரம் ஆகிய நூல்களிலும் சஞ்சிகைகளிலும் ஆக்கங்கள் எழுதியுள்ளார். அவளும் நானும் என்ற இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு நூலை தேசிய கலை இலக்கிய பேரவை (யாழ்ப்பாணம்) (2018.09.30) வெளியீடு செய்து உள்ளது. தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார். “புது விதி” பத்திரிகை 100 வது இதழை முன்னிட்டு நடாத்திய கவிதைப் போட்டியில் 1ம் இடம் (2019) பெற்றுள்ளார். உயர் தரத்தில் "உயிரியல் விஞ்ஞானம் " கல்வி பயின்றுள்ளார். மற்றும் கர்நாடக சங்கீதத்தையும் முறையாகப் பயின்று உள்ளார். தனது பல்கலைக்கழக நுழைவுக்காகக் காத்திருக்கிறார் இளம் எழுத்தாளராக அடையாளங் காணப்பட்ட மாதவி உமாசுதன்.


குறிப்பு : மேற்படி பதிவு மாதவி, உமாசுதசர்மா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.