ஆளுமை:மாதங்கி, அருள்பிரகாசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதங்கி
தந்தை அருள்பிரகாசம்
தாய் கலா
பிறப்பு 1975.07.18
ஊர் லண்டன்
வகை பெண் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதங்கி, அருள்பிரகாசம் (1975.07.18) லண்டனில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அருள்பிரகாசம்; தாய் கலா. மாதங்கி எனும் இயற்பெயரை கொண்டிருந்தாலும் மாயா எனும் புனைபெயரின் ஊடாக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாடகியாவார். லண்டனில் பிறந்த மாதங்கி ஆறு மாத குழந்தையாக இருந்த போது பெற்றோர் இலங்கைக்குத் திரும்பினர். மாதங்கி யாழ்ப்பாணத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். யுத்தம் தீவிரமடைந்த நிலையில் 1986ஆம் ஆண்டு மீண்டும் லண்டனுக்கு திரும்பினார். மாயா லண்டனில் உள்ள பல்கலைக்கழகமான Central Stint Martin இல் பெஷன், சினிமா (Fashion and Film) துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

இயக்குனர், இசை அமைப்பாளர், Fashion Designer, பாடகி என பன்முக ஆளுமை கொண்டவர் மாயா. இவரது முதலாவது அல்பம் அருளர் எனும் பெயரில் 2005ஆம் ஆண்டும் கலா எனும் பெயரில் இரண்டாம் அல்பம் 2007ஆம் ஆண்டும் வெளியிட்டார்.

Acadamy Award/ Grammy Award/ Best Female Artist Award/ Best Video Music Award என நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளார். ஆசியாவின் Acadamy Grammy விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமைக்குரியவர். இவரின் பாடல்களுக்கென தனியான ரசிகர்கள் கூட்டத்தையும் உலகளாவிய ரீதியில் வைத்துள்ளார். ஈழத்தமிழரின் பிரச்சினை முதல் பாலஸ்தீனம் காஸா பிரச்சினை வரை இவரின் இசை பிரதிபலிக்கின்றது.

2010ஆம் ஆண்டு Esquire Magazine வெளியிட்ட அதிக செல்வாக்குடையவர்களின் பட்டியலில் உலக அளவில் இவர் 75ஆம் இடத்தை பிடித்தார்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற சுப்பர் பொல் இசை நிகழ்ச்சியில் பாடகிகள் மடோனா, நிக்கி மினாஜ் ஆகியோருடன் மாயாவுடன் பங்குபற்றியிருந்தார்.

விருது

பிரித்தானியாவின் எம்.பி.ஈ (Member of the Order of the British Empire-MBE) பக்கிஹாம் அரண்மனையில் வைத்து பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் வழங்கினார்.

வெளி இணைப்புக்கள்