ஆளுமை:மாணிக்கவேல், வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாணிக்கவேல்
தந்தை வைரமுத்து
தாய் கணபதி கிறேஸ் பாக்கியம்.
பிறப்பு 1952.09.04
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை ஒய்வுநிலை அதிபர், சமாதான நீதவான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைரமுத்து மாணிக்கவேல்(1952.09.04) மட்டக்களப்பு, களுவன்கேணியைச் சேர்ந்த ஒய்வுநிலை அதிபர் மற்றும் சமாதான நீதவான். இவரது தந்தை வைரமுத்து; தாய் கணபதி கிறேஸ் பாக்கியம்.இவரது மனைவி சுலோசனாதேவி. தனது ஆரம்பக் கல்வியினை தரம் ஐந்து வரை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், அதைத் தொடர்ந்து வந்தாறூமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார். பின்னர் உயர் கல்வியினை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கற்றார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் மட்டக்களப்பு Power Work Department supervisor ஆகவும் , Pasikkudha Hotel Cooperation Room Boy ஆகவும் 1977 ஆம் ஆண்டு Cultivation Officer ஆகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் 1979 ஆம் ஆண்டு விசேட தெரிவின் கீழ் மாத்தறை கம்புறுகமுவ பாடசாலையின் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து படிப்படியாக பொத்துவில் சிங்கள மகா வித்தியாலயம், காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயம், ஓட்டமாவடி முஸ்லிம் மகா வித்தியாலயம் , 1982 இல் களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1992 இல் அம்பாறை பனங்காடு பாஸ்பதேஸ்வரர் வித்தியாலயத்தில் முதல் தடவையாக அதிபராகக் கடமையேற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டு மட்டக்களப்புப் பாலையடித்தோணா சிறிமுருகன் வித்தியாலத்தில் அதிபராகப் பொறுப்பேற்று 2012 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்று இன்று வரை சமாதான நீதவானாகக் கடமையாற்றுகிறார்.

இதுவரை இவர் பல கட்டுரைகள், கவிதைகள், நாடகப்பிரதிகள், வில்லுப்பாட்டுப் பிரதிகள் போன்றவற்றை எழுதியுள்ளார். எழுதியும் வருகின்றார். அத்துடன் தானொரு சமாதான நீதவான் என்ற வகையில் தனது ஊரவர்களுக்குப் பல சேவைகளைச் செய்து வருவதோடு, தனது சமூகம் சார்ந்த தெளிவினை மரபினடியாகப் பேணக்கூடியவராகவும், வேட்டுவச் சடங்குப் பாடல்களைத் திறமாகப் பாடக்கூடியவராகவும் காணப்படுகிறார்.