ஆளுமை:மஹாலிங்கசிவம், இராசையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஹாலிங்கசிவம்
தந்தை இரசையா
தாய் இராசம்மா
பிறப்பு 1933.01.12
ஊர் உடுப்பிட்டி
வகை விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹாலிங்கசிவம், இராசையா (1933.01.12 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த விரிவுரையாளர். இவரது தந்தை இராசையா; தாய் இராசம்மா. இவர் திருகோணமலை ஶ்ரீ சண்முகா வித்தியாலயத்திலும் இந்துக் கல்லூரியிலும் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து 1951 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 1955 இல் கணிதத்தில் கௌரவப்பட்டத்தைப் பெற்றதோடு பொதுநலவாயப் புலமைப் பரிசிலைப் பெற்றுக் கனடா - ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 1967 இல் பொருளாதார துறையில் முதுமாணிப் பட்டத்தையும் 1969 இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

1955 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர், கொட்டாஞ்சேனை சென்ற் பெனடிக் கல்லூரியில் கணித ஆசிரியராகவும் 1956 இல் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் கணிதப் போதனாசிரியராகவும் திட்டமிடல் செயலகத்தில் குடிசனப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவரை உலக உணவு விவசாயத்தாபனம் பாகிஸ்தானில் தனது ஆலோசகராக நியமித்ததோடு 1987 இல் அரசியல் அமைப்பிற்கான 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சூத்திரத்தை வடிவமைப்பதில் நிதி ஆணைக்குழுவின் பொருளியலாளராகக் கடமையாற்றி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 15-18