ஆளுமை:மலர்விழி, சிவஞானசோதி குரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மலர்விழி
பிறப்பு 1970.02.01
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலர்விழி, சிவஞானசோதி குரு (1970.02.01) மட்டக்களப்பு பிறந்த கலைஞர். நடனம், இசை, நாடகம், கூத்து ஆகிய துறைகளில் ஈடுபாடுகொண்டவர். ஆசிரியராக கடமையாற்றி வரும் மலர்விழி, பயிற்றப்பட்ட நடன ஆசிரியராவார். மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரி, திறந்த பல்கலைக்கழகப் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, வட இலங்கை சங்கீத சபையின் பரத நாட்டிய ஆசிரியர் தரம் ஒன்று, இந்தியா பாரதிதாசன் பல்கலைக்கழக நடன டிப்ளோமா, நடனத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1992ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிய வித்யா எனும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். பரதநாட்டியக் கலை எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் தேனக மலரிலும், பரத கலாலயத்தின் கலாலய சாகரத்திலும் வெளிவந்துள்ளன.