ஆளுமை:மயில்வாகனம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம்)
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் மாரிமுத்து
பிறப்பு 1950.04.03
இறப்பு -
ஊர் வேப்பவெட்டுவான்,கரடியனாறு,மட்டக்களப்பு
வகை வேட்டையர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதி மயில்வாகனம் (1950.04.03) இவர் வேப்பவெட்டுவான்,கரடியனாறு, மட்டக்களப்பைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த கைதேர்ந்த வேட்டையர் ஆவார். இவரது தந்தை கணபதிப்பிள்ளை;தாய் மாரிமுத்து. இவரது மனைவியின் பெயர் தர்மாவதி. இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை தரம் மூன்று வரைக்கும் வேப்பவெட்டுவான் அரச தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்றுள்ளார். இவரது பிறந்த இடம் கரையோர வேடர்களின் தொல்கிராமமான களுவன்கேணி ஆகும். தனது மூன்றாவது வயதில் இருந்து இவர் தற்போது வசிக்கும் கிராமத்தில் வசித்து வருகின்றார். தற்போது வரைக்கும் தமது வேட்டைத்தொழிலினை நவீன மாற்றதிற்கு அமைவாக செய்து கொண்டு வருகின்றார். அத்துடன் சேனைப்பயிர்ச்செய்கை, விவசாயம், நன்னீர் மீன்பிடி முதலான தொழில் நடவடிக்கைகளையும் செய்து வருபவராகவும் காணப்படுகின்றார்.