ஆளுமை:மனோகரன், அந்தோனி இம்மானுவேல்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரன்
தந்தை அந்தோனி இமானுவேல்பிள்ளை
தாய் கௌரியம்மாள்
பிறப்பு 1945
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், அந்தோனி இமானுவேல்பிள்ளை (1945 - ) ஓர் திரைப்படக் கலைஞர். இவரது தந்தை அந்தோனி இமானுவேல்பிள்ளை; தாய் கௌரியம்மாள். பல மொழிப் பாடல்கள் பாடுவதில் திறமை வாய்ந்துள்ள இவர், பொப்பிசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடலைப் பாடியுள்ள இவர், சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தும் பாடியும் வந்ததுடன் பாசநிலா, வாடைக்காற்று, புதிய காற்று ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 107-111