ஆளுமை:மதுரநாயகம், கஸ்பார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதுரநாயகம்
தந்தை கஸ்பார்
தாய் இராசமணி
பிறப்பு 1961.01.28
ஊர் உரும்பிராய்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரு. கஸ்பார் மதுரநாயகம் 28.01.1961 ஆம் ஆண்டு உரும்பிராயில் பிறந்தார்> இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்/ உரும்பிராய் றோ.க.த.க.பாடசாலையிலும், தரம் 5 தொடக்கம் தரம் 11 வரை யாழ்/ உரும்பிராய் இந்துக்கல்லூரியிலும் உயர்தரத்தினை யாழ்/ வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் B.Com பட்டத்தினையும் , PGDE,MED ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1992 ஆம் ஆண்டு வரை கிளி/வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் , 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரை கிளி/பளை றோ.க.த.க. பாடசாலையில் ஆசிரியராகவும், 1996 ஆம் ஆண்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு வரை கிளி/ பூநகரி மகா வித்தியாலயத்தில் (ஜெயபுரம்) ஆசிரியராகவும், 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையிலும் கடமையாற்றினார். 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரை கிளி/முருகானந்தா கல்லூரியில் அதிபராகவும், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கிளி/திருவையாறு மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை கிளி/அக்கராயன் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார். கிளிநொச்சித் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் , நெடுந்தீவு “சண்மலர் அறக்கட்டளை“ யின் இணைப்பாளராகவும், “AVR அறக்கட்டளை“யின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராகவும் , “பொன்மணி அறக்கட்டளை“ யின் இணைப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார்.