ஆளுமை:மஜீட்னூன், ராஹிலா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஹிலா
தந்தை முஹையதின் ஷாகுல் ஹமித்
தாய் ஐனுன் விவி
பிறப்பு 1949
இறப்பு -
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஹிலா, மஜீட்னூன் (1949) திருகோணமலை கிண்ணியா பெரியாற்றுமுனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹையதின் ஷாகுல் ஹமித்; தாய் ஐனுன் விவி. இவரின் கணவர் எம் எஸ் மஜிட்னூன். இவர் ஏழு பிள்ளைகளின் தாயராவார். க பொ த சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தியதன் மூலம் கிண்ணியாவில் க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய முதல் கிண்ணியா பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இலங்கை வானொலியில் சிறுவர் மலர், மாதர் மஞ்சரி போன்றவற்றிற்கு ஏராளமான ஆக்கங்கள் எழுதியுள்ளார். இவரின் முதற் கவிதை இல்லறப்பெண்ணே என்ற தலைப்பில் எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு முதல் பதிரிகையில் ஆக்கங்கள் எழுத ஆரம்பித்த றாஹிலா 1967ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் முஸ்லிம் சுடரில் இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் என்ற கட்டுரையே பத்திரிகையில் வெளியான தனது முதலாவது ஆக்கம் எனத் தெரிவிக்கிறார். தொடர்ந்து தினபதி, தினகரன், தினமுரசு போன்ற நாளிதழ்களுக்கும் கவிதை எழுதியுள்ளார். அரங்கேறும் கவிதைகள் என்னும் தனது கவிதை நூலை 2005ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மேலும் சிந்தனைத்துளிகள், சிறுகதைத்தொகுதி, அமைச்சர் ஜிப் ஏ.மஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

  • அரங்கேறும் கவிதைகள்
  • சிந்தனைத்துளிகள்
  • சிறுகதைத்தொகுதி

வெளி இணைப்புக்கள்