ஆளுமை:மங்கையர்க்கரசி, மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மங்கையர்க்கரசி
பிறப்பு 1917.07.08
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மங்கையர்க்கரசி, மயில்வாகனம் (1917.07.08) மட்டக்களப்பு, புளியந்தீவு சிங்களவாடியில் பிறந்த எழுத்தாளர். இளம் வயதிலேயே சுவாமி விபுலானந்த அடிகளாரது ஆசியுடனும் வழிநடத்தலுடனும் வளர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பற்றும் அறிவும் வளமும் கொண்டவர். மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் அதிபராகவும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையி்ல் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார். சுவாமி விபுலானந்த அடிகளாரது ஐம்பதாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு ”உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். மங்கையர்க்கரசியின் தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை பாராட்டும் முகமாக அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் ”சிவநெறிச்செல்வி” என்ற கௌரவப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 5402 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 5393 பக்கங்கள் {{{2}}}