ஆளுமை:மங்களகௌரி, விராகநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மங்களகௌரி
தந்தை விராகநாதன்
தாய் கமலா
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர், கல்வியாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மங்களகௌரி, விராகநாதன் மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை விராகநாதன்; தாய் கமலா. ஆரம்பக் கல்வியை கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கல்லூரி, தெகிவளை பிறஸ்பெட்டேரியன் பெண்கள் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக இசைத்துறை பட்டதாரியான இவர் வட இலங்கை சங்கீத சபையின் வயலின் வாய்ப்பாட்டு முடித்துள்ளார். வயலின் வாத்தியம் இசைப்பதிலும் மங்களகௌரி பட்டம் பெற்றுள்ளார். மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி பின்படிப்பு டிப்ளோமாவையும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்துள்ளார். ஹிந்துஸ்தானிய இசையையும் குரல் பயிற்சியையும் கொழும்பு டறிமி அக்கடமியில் கற்று இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். ஆசிரியராக நீண்ட காலம் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 1993ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார் மங்களகௌரி. இசைத்துறை, பெண்ணியம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை போன்ற துறைகளில் தனது ஆக்கங்களை எழுதி வரும் இவர் ஒரு நடிகையுமாவார். வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற நாளிதழ்களில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர நாடகக் கலைஞருமாவார். வானொலிக்கு ஆக்கங்கள் எழுதுவது, நிகழ்ச்சிகளில் பங்குகொண்டுள்ளார். மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மங்களகௌரி. அத்தோடு பல பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ”போடி மகள் பொன்னம்மா” என்ற தனி நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.

விருதுகள்

அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் சிறந்த நாடக இசைக்கலைஞர் விருது 1995ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. சிறந்த ஆசிரியருக்கான வித்தியாகீர்த்தி தேசிய விருது 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு மங்களகௌரி, விராகநாதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வளங்கள்

  • நூலக எண்: 9327 பக்கங்கள் 8