ஆளுமை:மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை (திருகோணமலை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரன்
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் அன்னபூரணி
பிறப்பு 1948.11.25
இறப்பு -
ஊர் சூரநகர், வெருகல், திருகோணமலை
வகை வேடக்கப்புறாளை மற்றும் தேவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் (1948.11.25) கிழக்கு மாகாண கரையோர வேடர் சமூகத்தின் (கப்புறாளை) மதகுருவாகவும், தேவாதியாகவும் காணப்படுகிறார். இவரது பிறந்த இடம் திருகோணமலை மாவட்டத்தின் வாழைத்தோட்டம் எனும் கிராமம் ஆகும். தற்போது வசிக்கும் இடம் சூரநகர் எனும் கிராமம் ஆகும். தந்தை கணபதிப்பிள்ளை ;தாய் அன்னபூரணி. இவரது மனைவி மாக்றேட். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் வாழைத்தோட்டம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஆறு வரை கல்வி கற்றுள்ளார். அவரது கிராமத்தில் வேடமொழியினைப் பேசக்கூடிய இக்காலத்தின் தலைமுறையாகக் காணப்படுகிறார். கிராமமெங்கும் காணப்படும் அனைத்து சடங்கு மையங்களிலும் சடங்கை நடாத்தும் கப்புறாளையாகவும், பிரதான தேவாதியாகவும் இவர் காணப்படுகிறார். அவரது பிரதேசத்தில் இன்றைய வாழும் தலைமுறையினரிடையே வேட மொழியினைப் பேசக்கூடியவராகவும், தமது சடங்கார்ந்த நடவடிக்கைகளுக்கான அழைப்புப் பாடல்களினைத் திறமாகப் பாடக்கூடிய ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார். இவரது பிரதான தொழில் சேனைப்பயிற்செய்கை ஆகும். அத்துடன் கடற்றொழிலிலும் ஈடுபடுகின்றார்.