ஆளுமை:மகேஷ், செல்லத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஷ்
தந்தை செல்லத்தம்பி
தாய் நாகம்மாள்
பிறப்பு 1943.07.30
ஊர் ஊர்காவற்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஷ், செல்லத்தம்பி (1943.07.30 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்தம்பி; தாய் நாகம்மாள். இவர் நெடுந்தீவு அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, நெடுந்தீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஆசிரியராக ஆசிரிய ஆலோசகராக உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தனது சேவையை மேற்கொண்டு 2003 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது முதற் கவிதையான சிங்காரச் சிரட்டை 1960 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இவரது ஊமை என்னும் சிறுகதை 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தினம் ஒரு கதைக் களத்தில் பிரசுரமானது. இவர் எழுதிய 500 இற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தினபதி, ஈழநாடு, நவமணி, தினக்குரல் முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது மனிதனைத் தேடி என்னும் சிறுகதைத் தொகுப்பு 2003 ஆம் ஆண்டு வடக்கு- கிழக்குக் கலாச்சார அமைச்சின் இலக்கிய விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 176-180