ஆளுமை:பொன்னுத்துரை, சண்முகம் (எஸ்.பொ.)
பெயர் | பொன்னுத்துரை |
தந்தை | சண்முகம் |
பிறப்பு | 1932.06.04 |
இறப்பு | 2014.11.26 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னுத்துரை, சண்முகம் (1932.06.04 - 2014.11.26) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். எஸ்பொ என அறியப்படும் இவர், ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார்.
இவர் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்ததுடன் நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் தனது 13 ஆவது அகவையில் எழுத ஆரம்பித்தார். இவரது முதலாவது புதினமான 'தீ' ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையைத் தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியதால் இவர், தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.
இவர் புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற புனைபெயர்களில் சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவில் சிறிதுகாலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்ததுடன் சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 107-109
- நூலக எண்: 3771 பக்கங்கள் 104
- நூலக எண்: 16488 பக்கங்கள் 107-108
- நூலக எண்: 395 பக்கங்கள் 30-36
- நூலக எண்: 396 பக்கங்கள் 35-40
- நூலக எண்: 397 பக்கங்கள் 28-34
- நூலக எண்: 398 பக்கங்கள் 31-37
- நூலக எண்: 399 பக்கங்கள் 22-25
- நூலக எண்: 2016 பக்கங்கள் 16-25
- நூலக எண்: 2069 பக்கங்கள் 19-27
- நூலக எண்: 2081 பக்கங்கள் 14
- நூலக எண்: 3391 பக்கங்கள் 16
- நூலக எண்: 5624 பக்கங்கள் 03-05