ஆளுமை:பொன்னம்பலம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், வேலுப்பிள்ளை காரைநகர், தங்கோடையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. கொழும்பில் வர்த்தக ஸ்தாபனத்தை உருவாக்கிய இவர், இலங்கையில் முதன் முதலாகப் பீடித் தொழிலைச் செய்து காட்டியதோடு, இந்தியாவிலும் தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கிப் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்ததால் கமலா பீடிப் பொன்னம்பலம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

செல்வத்தைப் பல நற்பணிகளுக்குப் பயன்படுத்திய இவர், காரைநகர் யாழ்ரன் கல்லூரியைக் கட்ட உதவினார். இவர் மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மண்டபம் ஒன்றைக் கட்டியவர். இவரால் கொழும்பில் பிரபலமாக விளங்கும் இராமகிருஷ்ண மட நூல் நிலையம் கட்டப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 365