ஆளுமை:பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம்
தந்தை சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1917.04.12
இறப்பு 1999
ஊர் கந்தரோடை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை (1917.04.12 - 1999) யாழ்ப்பாணம், கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவர் 1962 ஆம் ஆண்டு விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் ஓவியக் காட்சியில் பங்குபற்றி நிலக்காட்சி, நிகழ்ச்சிச் சித்தரிப்பு போன்ற பல ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார்.

நாடகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், நாடகத்திற்கான காட்சியமைப்புக்களை வரைந்துள்ளார். ஓவிய உத்திகளில் தேர்ச்சி பெற்ற இவர், ஓவியக் கல்வியின் தரத்தைப் பாடசாலைகளில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 184