ஆளுமை:பொன்னம்பலம், கந்தையா (வேலணை)
பெயர் | பொன்னம்பலம் |
தந்தை | கந்தையா |
தாய் | முத்துப்பிள்ளை |
பிறப்பு | 1908.10.26 |
இறப்பு | 2003.03.05 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னம்பலம், கந்தையா (1908.10.26 - 2003.03.05) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை கந்தையா; தாய் முத்துப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்றார். இவர் சிறுவயதிலிருந்து தனது மாமன் சேதுபதி பொன்னையாவுடன் இணைந்து காலியில் வியாபரத்தில் ஈடுபட்டார். இவர் நீலமணி என்று அறியப்பட்டார்.
இவர் பிற்பட்ட காலத்தில் தனது வணிக நிறுவனத்தினை மைத்துனரான நாகையாவுடன் இணைந்து V.K.P. & S.K. Nagaiah & Co. என்னும் பெயரில் 1951 ஆம் ஆண்டு வரை இயக்கி வந்தார். இவர் வேலணை, சரவணை, புளியங்கூடல், நாரந்தனை, அனலைதீவு முதலான இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையைக் கொள்வனவு செய்து காலியில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்தனர்.
இவர் இறைபணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவர் காலி மாநகரில் அமைந்திருந்த சிவன் ஆலய பரிபாலன சபையில் நீண்டகாலமாகப் பொருளாளராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 425-429