ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, தா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலபிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலபிள்ளை, தா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நீண்ட காலமாகத் தென்னிந்தியாவில் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவசைலத்தில் வாழ்ந்ததுடன் திருவிதாங்கூரில் எக்சைஸ் கமிஷனர் உத்தியோகத்தராக இருந்தார். இவர் மலபார் குவாட்டேளி, தமிழியன் அன்ரி குவேரி முதலான ஆங்கிலச் சஞ்சிகைகளில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதோடு வரலாற்றாராய்ச்சியில் ஈடுபட்டு வஞ்சிமாநகர் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளில் மாணிக்க வாசகரும் பூர்வீக மலையாள கிறிஸ்தவர்களும், கொடுங்கோளூர்க் கோயிலின் தோற்ற வரலாறு, நாஞ்சில்நாடு செங்கோடு ஆகியவற்றின் பண்டைப் பெருமை, இரமாயணத்தின் தருமம், தென்னிந்தியப் பிரதிநிதித்துவச் சபைகள் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 1911 ஆம் ஆண்டு பாளையங்கோட்டைச் சைவ சமயாவிபிருத்திச் சபை மலரில் திருவிடமும் சைவமும் என்ற தமிழ்க் கட்டுரை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 177-178