ஆளுமை:பேரம்பலம், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம்
தந்தை கந்தசாமி
தாய் பர்பதம்
பிறப்பு 1946.12.18
இறப்பு 1991.07.15
ஊர் நெல்லியடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம், கந்தசாமி (1946.12.18 - 1991.07.15) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தசாமி; தாய் பர்பதம். இவர் நெல்லை க. பேரன் என்று அறியப்பட்டார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாணச் செய்தியாளராகவும் பின்னர் 1966 இல் அஞ்சற் திணைக்களத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

இவர் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறான், சத்தியங்கள் ஆகிய சிறுகதைகளையும் விமானங்கள் மீண்டும் வரும், வளைவுகளும் நேர்கோடுகளும் ஆகிய நாவல்களையும் பேரனின் கவிதைகள் என்ற கவிதை நூலையும் சந்திப்பு என்ற நேர்காணல் நூலையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 235-238