ஆளுமை:புவனேஸ்வரி, இரத்தினசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனேஸ்வரி
தந்தை சூரி பொன்னையா
தாய் சின்னத்தங்கம்மா
பிறப்பு 1953.07.18
ஊர் முள்ளியவளை
வகை பெண் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனேஸ்வரி, இரத்தினசிங்கம் முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அண்ணாவியார் கலைமாமணி சூரி பொன்னையா; தாய் சின்னத்தங்கம்மா. ஆரம்பக் கல்வியை முள்ளியவளை சைவப் பாடசாலையிலும் உயர் கல்வியை வித்தியானந்தா கல்லூரியிலும் கற்றார். சங்கீதக் கல்வியை இவரின் தந்தையிடமே ஆரம்பத்தில் கற்றார். இவரின் எட்டு வயதிலேயே தந்தையார் பழக்கிய இசை மரபுவழி நாடகம், சம்பூர்ண இராமாயணத்தில் அகலிகை நீலமாலா (சீதையின் தோழி) ஆக நடித்து பல மேடைகள் அரங்கேறியுள்ளார். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றிய சங்கீத பூஷணம் சதாசிவம் அவர்களிடம் இசை கற்ற பின் சங்கீத பூஷணம் வே.ஜெயவீரசிங்கம் அவர்களிடம் முறையாக சங்கீதத்தை கற்றார்.

இலங்கை வானொலியில் தமிழ் பிரிவில் கர்நாடக இசைத்துறைக்கு பொறுப்பாக இருந்த சங்கீதபூஷணம் இசைப் புலவர் என்.சண்முகரத்தினம் அவர்களிடமும் சங்கீத நுணுக்கங்களைக் கற்றுள்ளார். இவர் சங்கீதம் கற்ற மூவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1962ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நாடக கலா மன்றத்தின் ஸ்தாபகரும் கௌரவ பொதுச் செயலாளருமாகிய சிவநேசன் எஸ்.வி.கந்தையா அவர்களால் முல்லைச் சகோதரிகள் என்று பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவரும் இவரது சகோதரி பார்வதிதேவியும் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான அரங்கில் இசை கச்சேரி செய்துள்ளார்கள்.

இவரின் தந்தையார் அண்ணாவியார் சூரி பொன்னையா பழக்கிய நாடகங்களான சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் அரிச்சந்திரனாகவும், கோவலன் கண்ணகியில் கோவலனாகவும் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாகவும் (திரௌபதை) நடித்துள்ளார். பாடுபடு நண்பா, தைதை என்றெனில் உன்னைப்பாடுவேன் கந்தா, சரஸ்வதிதாயே, ஏனடி ராதா, இன்றோர் புதியதினம் உட்பட பல நூற்றுக்கணக்கான பாடல்களை இலங்கை வானொலியில் பல மெல்லிசைப் பாடலகளாக பாடிள்ளார். வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் மீது இருபத்து இரண்டு பாடல்கள் இறுவட்டாக வெளியிட்டுள்ளார். முள்ளியவளை காட்டு விநாயகர் மீது பல பாடல்கள் பாடி இறுவட்டாக வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது பல இசைக் கச்சேரிகள் செய்து கொண்டுள்ளார்.

மரபுவழி நாடக வரிசையில் அரிச்சந்திரா மயான காண்டத்தை 2014ஆம் ஆண்டு வட மாகாண நாடக விழாவில் மூன்றாமிடத்தை பெற்றது. மரபுவழி நாடகமான வேறுப்படுத்த வீராங்கனை என்னும் சிந்து நடைக் கூத்தை பல மேடைகள் அரங்கேற்றியுள்ளார்.

விருதுகள்

கந்தசாமி தேவஸ்தானம் மெல்லிசை சுகந்தம் எனும் பட்டத்தைசூட்டி கௌரவித்துள்ளது.

புராண இசையரசி பட்டம்.

மதுர இசைக்குயில் – வவுனியா தமிழ்ச்சங்கம்.

குறிப்பு : மேற்படி புவனேஸ்வரி, இரத்தினசிங்கம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.