ஆளுமை:புண்ணியராஜ், பெருமாள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புண்ணியராஜ்
தந்தை பெருமாள்
தாய் -
பிறப்பு 1982.11.22
ஊர் கிளிநொச்சி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புண்ணியராஜ், பெருமாள் (1982.11.22 -) கண்டாவளை, கூகை மாவடியில் பிறந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை பெருமாள். இவர் ஆரம்பக்கல்வியையும், உயர்கல்வியையும் கிளி/ கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கற்றார்.

2004-2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு ஆலயங்களில் நடித்துள்ளார். 2015 இல் முத்தமிழ் கலாமன்றத்தின் சார்பாக 'கண்டாவளை வரலாறு' எனும் வில்லிசையினை நெறியாள்கை செய்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். இவர் 'கண்டாவளை இளங்கவி', 'இளங்கவி' எனும் புனைபெயரில் பாடல், கவிதகளை உள்ளூர் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 51-53