ஆளுமை:பீர்முகம்மது, ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீர்முகம்மது
தந்தை அலியார் அசனார்
தாய் உதுமானாச்சி
பிறப்பு 1949.12.28
ஊர் அம்பாறை சாய்ந்தமருது
வகை எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீர்முகம்மது, ஏ (1949.12.28) அம்பாறை மாவட்டம் சாயந்தமருதில் பிறந்த அளுமை. இவரது தந்தை அலியார் அசனார். தாய் உதுமனாச்சி. இவரின் தந்தையார் கிராமிய இலக்கிய வகைகளில் வசைப்பாடல்களை இயற்றிப் பாடுவதில் வல்லவர். ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது வடக்கு தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை சாய்ந்தமருது முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக கலைபட்டதாரியாவார். கல்வி முகாமைத்துவ டிப்ளொமாவை அகில இந்திய முகாமைத்தவக் கற்கைகள் நிறுவகம் செய்னையிலும் உளவியல் டிப்ளோமாவை அகில இந்திய முகாமத்தவக் கற்கைகள் நிறுவனம் சென்னையிலும் கற்றார்.

1971ஆம் ஆண்டு கல்முனை சாஹிராக் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரியராக நியமனம் றெ்றார். 1972 1973 பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கணித ஆசிரியராக விசேட பயிற்சி பெற்றார். 1989ஆம் ஆண்டு அதிபராகவும் 1991ஆம் ஆண்டு ஆரம்ப கல்வி மற்றும் கணித பாடங்களுக்கான தொலைக்கல்விப் போதனாசிரியராகவும் நியமனம் பெற்றார். உதவிக் கல்விப் பணிப்பாளர், கல்முனை சாஹிராக் கல்வி அதிபர், கல்முனை பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்த இவர் 2008ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

மாணவனாக இருந்த காலத்தில் முளரி என்ற சங்கையில் எழுத்துப் பணியை ஆரம்பித்தார். தினகரன், நவமணி, தினபதி, சிந்தாமணி, மாணவர் மஞ்சரி, ஸாஹிரா, யாழ்பிறை, கலாவதி, கல்பனா, ஓலை, செங்கதிர் ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. கவிதை, சிறுகதை, கட்டுரை, பேச்சு, நாடகம், நடித்தல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

ஸஹிரா, நிழல், யாழ்பிறை, கலாவதி ஆகிய சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியர், வசந்தம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இருந்துள்ளார்.


விருதுகள்

சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் – அகில இலங்கை இன நட்புறவு ஒன்றியம் 2008.

கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக சர்வோதய விருது 2008.

தமிழ் மருத மாமணி பட்டம் – LACSDO MEDIA NETWORK SRILANKA 2011.

கிழக்கு முதலமைச்சர் விருது (கவிதை) – 2011.

கலாபூஷணம் விருது (இலக்கியம்) அரச விருது விழா – 2011.


படைப்புகள்

வளங்கள்

  • நூலக எண்: 10181 பக்கங்கள் 3-5
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பீர்முகம்மது,_ஏ.&oldid=408072" இருந்து மீள்விக்கப்பட்டது