ஆளுமை:பிரியதர்சினி, குமார

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரியதர்சினி
தந்தை ஸ்டீபன்
தாய் பத்மசிறி
பிறப்பு 1993.11.03
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரியதர்சினி, குமார (1993.11.03) யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்த கலைஞர். இவரது தந்தை ஸ்டீபன்; தாய் பத்மசிறி. ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி நாச்சிக்குடா தமிழ்கலவன்பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை பாஷையூர் சென் அன்தனிஸ் றோமன் கத்தோலிக்க மகளிர்பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் நாவற்குழி மகாவித்தியாலயத்திலும் கற்றார்.

திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரியதர்சினி நடிகை, இயக்குனர், தயாரிப்பாளரென பன்முகத் திறமைகளைக்கொண்டவர். 2012ஆம் ஆண்டு தொடக்கம் நடிப்புத்துறையில் நுழைந்துள்ளார். எழுத்துப்பிழை, Acall, தவறிப்பிறந்ததரளம், தூண்டில், குருதிப்பூக்கள், சீட்டு, நெஞ்சேயெழு, திரைக்கதையில் அவள், உயிரெழுத்து, உயிர்மூச்சு, சொந்தமென்னபந்தமென்ன, பூமாலை ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். பனைமரக்காடு படத்தின் இணை இயக்குனர்,நடிகையாகவும் இப்படத்தில் செயற்பட்டுள்ளார்.திரையிட தயாரான நிலையில் உள்ள மலரேமௌனமா படத்தின் பிரதான கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவள் துணை நடிகையாக நடித்துள்ளார், ”கோமாளிகள்கிங்ஸ்” படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். பலபாடல்களிலும் நடித்துள்ளதுடன் இறுவட்டாக வெளியிட்டுள்ளார் அத்துடன் பல விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார்.

விருதுகள்

யாழ் உடுவில் குபேரகா கலைமன்றம் வடஜோதி விருது - 2019.

எழுத்துப்பிழை -சிறந்த நடிகைக்கான விருது 2012ஆம் ஆண்டு.(AAA Movies)

சீட்டு – சிறந்த நடிகைக்கான விருது 2013ஆம் ஆண்டு. (AAA Movies)

வடக்கு மாகாணசபை கல்விபண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகாரத்துறை அமைச்சு நல்லூர் பிரதேச செயலகம் நடத்திய குறுந்திரைப்பட போட்டியில் 2014ஆம் ஆண்டு திரைக்கதையில் ”அவள்” திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கானவிருது.

ரதி அவார்ட் ”எழுத்துப்பிழை” படத்திற்கு சிறந்த நடிகை விருது.

எம்ஜிஆர் 100ஆவது ஆண்டு விழாவின்போதுதேசோதயம் சர்வோதயம்-அரியாலை கலைமாமணிவிருதை 2017 ஆம் ஆண்டு வழங்கியது.

ஒற்றுமைக்கான உறவுபாலம் - கலைமுத்து, கலைச்சுடர்விருதை 2015ஆம் ஆண்டுவழங்கியது.


குறிப்பு : மேற்படி பதிவு பிரியதர்சினி, குமார அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்