ஆளுமை:பிரான்ஸிஸ் ஜெனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரான்ஸிஸ் ஜெனம்
பிறப்பு
ஊர் சில்லாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்ஸிஸ் ஜெனம் யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவர் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தொழிற் சங்கத்தில் நிருவாகக் காரியதரிசியாகக் கடமையாற்றியுள்ளார். இவர் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த கோடை, கந்தன் கருணை, பொறுத்தது போதும், கூடி விளையாடு பாப்பா ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தாசீசியஸ் தயாரித்த பொறுத்தது போதும் நாடகத்தில் நடித்தமைக்காகச் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி விருது 1980 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 133-137