ஆளுமை:பிரகதாம்பாள், தில்லைநடராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரகதாம்பாள்
தந்தை சண்முகம்பிள்ளை
தாய் விஜயலட்சுமி
பிறப்பு 1943.03.27
ஊர் யாழ்ப்பாணம், இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரகதாம்பாள், தில்லைநடராசா (194.03.27) யாழ் மாவட்டம் இணுவிலில் பிறந்த கலைஞர். இவரின் தந்தை பிரபல இசைக்கலைஞர் சண்முகம்பிள்ளை; தாய் பிரபல இசை நடனக் கலைஞர் விஜயலட்சுமி. சிறுவயது முதலே தன் தாயைக் குருவாகக் கொண்டு நடனக் கலையைக் கற்றார். திருமதி சண்முகம் பிள்ளை அவர்களின் மூத்த மகள் என்பதால் தாயுடனான கலைப் பயணத்தை நீண்டகாலம் பயணித்தார்.1958ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது தாயின் நட்டுவாங்கத்தில் கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நடனம் ஆடினார்.இதன்போது நேரு அவர்களின் பெரும் பாராட்டினையும் இவர் பெற்றார்.

ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய நடனங்களில் மிகவும் ஈடுபாடுடையவராவார். அத்துடன் நாட்டிய நாடகங்களிலும் பங்குபற்றியுள்ளார். நாட்டிய மார்க்கத்தில் ஜதீஸ்வரம், தில்லானா போன்ற உருப்படிகளை மேடை நிகழ்ச்சிகளில் விஜலட்சுமி அவர்களின் நட்டுவாங்கத்தில் ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.

கலைவாழ்வில் இவர் பெற்ற அனுபவங்களைக் கொண்டு முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நடாத்திய லலித கலா நிலையத்தின் முதல் நடன ஆசிரியராக திகழ்ந்தார் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், நல்லை ஆதீனம், மருதனா பிறிஸ்பற்டீரியன், யாழ் Jaffna convent கொழும்பு பீவர் கல்லூரியின் நடன ஆசிரிராகவும் கடமை ஆற்றினார். இறுதியாக சரசவிபாய என்ற நிலையத்தில் இளைய சகோதரியோடு இணைந்து நடன வகுப்புக்களை நடாத்தி வந்தார். யாழ்ப்பாணத்திலும் நாட்டியாலயம் என்ற நடனக் கலாசாலையை நடாத்தி வந்துள்ளார்.

விருதுகள்

அரச கலாபூஷணம் விருது

வளங்கள்

  • நூலக எண்: 69919 பக்கங்கள் 166