ஆளுமை:பாஹிமா, மீராசாஹிப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாஹிமா
தந்தை மீராசாஹிப்
தாய் சஹர்வான் பீவி
பிறப்பு
ஊர் வாழைச்சேனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாஹிமா, மீராசாஹிப் மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மீராசாஹிப்; தாய் சஹர்வான் பீவி. ஆரம்பக் கல்விக் கல்வியை வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையிலும் உயர் கல்வியை வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயத்திலும் கற்று பட்டப்படிப்பினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் நிறைசெய்துள்ளார். தேசிய டிப்ளோமா ஆங்கிலம் இறுதியாண்டில் கற்று வருகிறார். பாடசாலைக்காலத்திலேயே கவிதை எழுதி வருகிறார். விதையென விழு என்னும் கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தனது இரண்டாவது கவிதை நூலை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார் எழுத்தாளர்.

படைப்புகள்

  • விதையென விழு (கவிதைத் தொகுதி)


குறிப்பு : மேற்படி பதிவு பாஹிமா, மீராசாஹிப் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.