ஆளுமை:பாவிலுப்பிள்ளை, அவுறாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாவிலுப்பிள்ளை
தந்தை அவுறாம்பிள்ளை
பிறப்பு 1891.05.01
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவிலுப்பிள்ளை, அவுறாம்பிள்ளை (1891.05.01 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறாம்பிள்ளை. இவர் 1918 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்துக்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் தாம் பாடிய முதலாவது கூத்திலிருந்தே மற்றவர்களுக்குப் பாடல் பழக்கி அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவர் 52 இற்கும் மேற்பட்ட கூத்துக்களை எழுதிப் பழக்கி மேடையேற்றியுள்ளார். இவர் யூதகுமாரன், வரப்பிரகாசம், சுழியார், செனகப்பு, கற்பலங்காரி, மத்தேஸ்மவுறம்மாள், சபீனகன்னி, தர்மபிரகாசம் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198