ஆளுமை:பாலேஸ்வரன், காசிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலேஸ்வரன்
தந்தை காசிப்பிள்ளை
தாய் -
பிறப்பு 1962.12.25
ஊர் கிளிநொச்சி
வகை பல்துறையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலேஸ்வரன், காசிப்பிள்ளை (1962.12.25-) கிளிநொச்சி கண்டாவளையை சேர்ந்த பல்துறையாளர். இவரது தந்தை காசிப்பிள்ளை. இவர் தனது கல்வியை கிளி/ கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கற்றார்.

இவர் 1982 இல் சுட்டிவேரம் கண்ணகை ஆலய முன்றலில்" சட்டத்துக்கு ஒரு சவால் எனும் நாடகத்தை நெறியாள்கை செய்து பாராட்டு பெற்றவர். 2014 ஆம் ஆண்டில் இவரது "மண்வாசனை எனும் சிறுகதை தொகுப்பு பெரும் வரவேற்பை வாசகர்களிடத்தும் பிரதேச மக்களிடத்தும் பெற்று இருந்தமையும் அத்துடன் மாற்றுத்திறனாளியான இவரது இந்நூலிற்காக ஜனாதிபதி மாளிகையில் கௌரவமும் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகு புலமையாளனும் பன்முக ஆளுமையும் உடைய இப் படைப்பாளியைக் கௌரவித்து 2011 ஆம் ஆண்டில் எமது கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசர விழாவின் போது "கலை ஒளி" விருது வழங்கி கௌரவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 32-33