ஆளுமை:பாலாம்பிகை, இராஜேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலாம்பிகை
தந்தை சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக் குருக்கள்
தாய் இராஜேஸ்வரி அம்மாள்
பிறப்பு 1947.04.24
ஊர் யாழ்ப்பாணம் கோப்பாய்
வகை இசைக் கலைஞர், எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலாம்பிகை, இராஜேஸ்வரன் (1947.04.24) யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்த இசைக் கலைஞர். இவரின் தந்தை சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக் குருக்கள்; தாய் இராஜேஸ்வரி அம்மாள். ஆரம்பக் கல்வியை கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்திலும், இடைநிலை உயர் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் ஆங்கிலமொழியில் கற்றார். 1966-1969ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை அடையாறு கர்நாடக இசைக்கல்லூரியில் ஆங்கில மொழியில் கற்று சங்கீத வித்துவான் என்ற பட்டத்தைப் பெற்றார். 1969-1970ஆம் ஆண்டு டிப்ளோமா இசை கற்பித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை முதுமாணிப் பட்டத்தை முதலாம் தரத்தில் பெற்றார். தொடர்ந்து முதுதத்துவமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் தமிழ்நாடு கொடைக்கானல் அன்னை திரேசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக்கான சிறப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளார். SLES பரீ்சையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

1982-1997ஆம் ஆண்டு வரை ஆசிரியராகவும், 1999-2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிபராகவும், 2002-2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு இணைப்பாளராகவும் 2005-2012ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணிப்பாளராகவும் இவர் பதவிகளை வகித்து கடமையாற்றியுள்ளார்.

ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிந்துள்ளன. இசை ஆய்வு கட்டுரை, கற்பித்தலில் புதிய லய அணுகுமுறை, மனோதர்ம சங்கீதம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் நீரர மகளிர் (மீன்பாடும் தேன்நாடு) இன்னிசை நடன, நாடகம் பல வருட ஆய்வின் மூலம் 2011ஆம் ஆண்டு நிறுவக அரங்கில் விபுலானந்தரின் நினைவு விழாவில் மேடையேற்றப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாலாம்பிகை பல இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார்.

விருதுகள்

சர்வதேச மருத்துவ மாநாட்டில் - இசையால் மருத்துவம் (ஆங்கிலம்) ஒரெயொரு தமிழ் பிரதிநிதி (2011) – மனோ வித்தியாபதி சம்மான.இவ்விருதைப் பெற்றுக்கொண்ட ஒரே இலங்கைத் தமிழர் இவராவார்.

வலிகாமம் மேற்கு கலாசார பேரவையின் கலைவாரிதி பட்டம் – 2015

குறிப்பு : மேற்படி பதிவு பாலாம்பிகை, இராஜேஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7642 பக்கங்கள் 3-7

வெளி இணைப்புக்கள்