ஆளுமை:பாலசுப்பிரமணியம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை ஆறுமுகம்
தாய் -
பிறப்பு 1956.05.11
ஊர் கிளிநொச்சி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், ஆறுமுகம் (1956.05.11 -) கிளிநொச்சி பளையை சேர்ந்த நாடக கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் தனது ஆரம்ப கல்வியை தட்டுவன் கொட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார்.

இவர் சிறுவயதுகளில் இசை நாடக, கூத்துக்களை யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த எஸ். எம் கிஸ்ரோஸ்ரம் மற்றும் எஸ். ரீ. செல்லத்துரை போன்றவர்களிடம் பயின்றவர். "பாலா அண்ணாவி" என பிரதேசத்தவர்களால் அழைக்கப்படும் இவர் இளம் கூத்து கலைஞர்களுக்கு கூத்துக்களை பழக்கி மேடையேற்றும் பிரதான அண்ணாவியாக தற்போது செயற்பட்டு வருகின்றார்.

சம்பூர்ண காத்தான் கூத்துக்கும் கோவலன் கண்ணகி கூத்துக்கும் பிரதான அண்ணாவியாக இவர் தொழிற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது சேவைக்காக 2012 ஆம் ஆண்டில் கண்டாவளை பிரதேச கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார விழாவில் "கலை ஒளி விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 28-29