ஆளுமை:பாத்திமா றிஸ்வானா, மொஹமட் பாரூக்
பெயர் | பாத்திமா றிஸ்வானா |
தந்தை | மொஹமட் பாரூக் |
தாய் | சுவைரா பீபீ |
பிறப்பு | 1979.07.18 |
ஊர் | பதுளை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாத்திமா றிஸ்வானா, மொஹமட் பாரூக் பதுளை வெலிமடை குருத்தலாவையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை மொஹமட் பாரூக்; தாய் சுவைரா பீபீ. குருத்தலாவை முஸ்லிம் தேசிய பாடசாலையில் கல்வி கற்றார். ஊடகவியலாளரான இவர் ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருவதோடு ஊவா சமூக வானொலியும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் ஊடகக் கற்கை நெறிக்கு வளவாளராகவும் இருக்கிறார் பாத்திமா றிஸ்வானா. ஊவா சமூக வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும் இருக்கிறார். இவர் வானொலி நடிகையாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார். இவர் நடித்த நாடகங்கள் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவின் ஊடாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவரின் முதலாவது அறிவிப்பு நிகழ்ச்சி தமிழ் சிங்கள ஆகிய இரு மொழிகளிலும் அமைந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஊவா மாகாண சபையின் கல்வி அமைச்சியின் கீழ் இயங்கும் இவ் வானொலி கல்வி, சுகாதார நிகழ்ச்சிகளை அடிப்படிடையாகக் கொண்டதாகவே இதன் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இலங்கையின் ஐந்தாவது சமூக வானொலி ஊவா சமூக வானொலி என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா றிஸ்வானா கடந்த 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார். பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் இவரின் குரல் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.
குறிப்பு : மேற்படி பதிவு பாத்திமா றிஸ்வானா, மொஹமட் பாரூக் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
விருதுகள்
2015ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சரினால் விருது வழங்கி கௌரவிப்பு.. 2015ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாகித்திய வழாவில் விருது வழங்கி கௌரவிப்பு. 2016ஆம் ஆண்டு கிழக்கில் லக்ஸ்டோ மீடியா நிறுவனம் கலைச்சுடர் பட்டமும் விருதும் வழங்கியது. 2018ஆம் ஆண்டு ஒலிபரப்பான சிறந்த கல்வி நிகழ்ச்சிக்கான (தமிழ்) விருது 2019ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கான ஜனாதிபதி விருது.