ஆளுமை:பாத்திமா றினூஷியா, ஜௌபர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா றினூஷியா
பிறப்பு
ஊர் கம்பஹா திஹாரிய
வகை ஊடகவியலாளர்

பாத்திமா றினூஷியா, ஜௌபர் கம்பஹா மாவட்டம் திஹாரியில் பிறந்தவர். திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் பயிலுனராக 1992ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

1994ஆம் ஆண்டு செய்திப் பிரிவில் செய்தி உதவியாளராக நியமனம் பெற்றார். 2001ஆம் ஆண்டு முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியும் இவரது தயாரிப்பிலேயே ஒலிபரப்பானது. 2009ஆம் ஆண்டு முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்ட இவர் 2014ஆம் ஆண்டு சிரேஷ்ட அமைப்பாளராக உயர்ந்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் முதல் பெண் கட்டுப்பாட்டாளர் என்ற பெருமைக்குரியவர்.

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி தயாரிப்பாளராக கடமை புரிந்த காலத்தில் அவ்வப்போது பிரதிகளையும் எழுதியுள்ளார்.