ஆளுமை:பாத்திமா முஜாமலா, றஷீட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றஷீட் பாத்திமா முஜாமலா
தந்தை மீராலெப்பை றஷீட்
தாய் சொஹறா உம்மா
பிறப்பு 1982.02.21
ஊர் நிந்தவூர், அம்பாறை
வகை கவிஞர், எழுத்தாளர்
புனை பெயர் வானம்பாடி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கவிதாயினி றஷீட் பாத்திமா முஜாமலா அவர்கள் (பி. 1982.02.21) அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த கவிஞராவார். இவரது புனைப்பெயர் வானம்பாடி. இவர் மீராலெப்பை றஷீட் மற்றும் மர்ஹூம் அகமட் லெப்பை சொஹறா உம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.

இவர் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கமு/கமு/ அல் – மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் பயின்றார். ஆரம்ப கால எழுத்து பயணமானது தரம் 10 ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. பாடசாலை போட்டிகளில் இவரின் இலக்கிய ஆர்வம் அதிகரித்து வந்தது.

இவரது முதலாவது கவிதை பாடசாலையில் மீலாதுன் நபி விழாவில் எழுதப்பட்டதும் முதலாவது சிறுகதையாக தமிழ் தின போட்டியில் எழுதியதுமாகும். அதன் பின் இவரது இலக்கிய பயணம் திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 வருடங்கள் இல்லாமல் இருந்தது.

2012ம் ஆண்டிற்கு பின்னர் திரும்பவும் இவர் பத்திரிகை, முகநூல் மற்றும் வானொலி மூலமாக இலக்கிய துறையில் ஈடுபட்டு வருகின்றார். அத்தோடு எழுத்து, நீர்மை போன்ற வலைதளங்கள், வாராந்த பத்திரிகையாக தினகரன், விடிவெள்ளி, தமிழன், தினக்குரல், வீரகேசரி, தமிழன் போன்றனவும் வெண்ணிலா, தேடல், வளரி, அக்கினிச்சிறகு போன்ற சஞ்சிகைகளிலும் உடைந்த கப்பல், சுருக்குப்பை, சுட்டுவிரல், மகடு 100 போன்ற தொகுப்புகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

2015ம் ஆண்டு துளிப்பாக்கள் எனும் கவிதை தமிழன் பத்திரிகையில் முதலாவதாக வெளிவந்தது. இவரது முதலாவது முசாப்பும் எனும் சிறுகதை வாரமஞ்சரியில் வெளிவந்தது. 2021ம் ஆண்டு இலங்கை கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய கையெழுத்து பிரதி போட்டியில் இவரது மழைவானில் ஒரு மின்மினி எனும் கவிதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டது.

இவரது 2023ம் ஆண்டு நீதம் எனும் கவிதைத் தொகுப்பும், 2024ம் ஆண்டு ரூஹின் சிறகுகள் எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. ரூஹின் சிறகுகள் நிந்தவூர்ப் பிரதேசத்தில் இருந்து முதன்முறையாக வெளி வருகின்ற ஒரு பெண்படைப்பாளியின் கவிதை நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு. இவர் பிரதேச ரீதியான பாராட்டுக்களையும் கலாச்சார அமைப்பினால் பாராட்டினையும் பெற்றுள்ளார்.