ஆளுமை:பாத்திமா பர்ஸானா, றியாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா பர்ஸானா
தந்தை முகம்மது ஹனிபா மீராலெவ்வை
தாய் பாத்திமா
பிறப்பு 1978.10.16
ஊர் இறக்காமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா பர்ஸானா, றியாஸ் அம்பாறை இறக்காமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது ஹனிபா மீராலெவ்வை; தாய் பாத்திமா. இறக்காமம் அல்-அஸ்றப் மத்திய கல்லூரி, கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பிரதேச செயலகத்தில் அரச முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவரின் ஆக்கங்கள் எங்கள் தேசம், அல்ஹசனாத், தினகரன், விடிவெள்ளி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. பதுமராகம் என்ற பெயரில் 2016ஆம் ஆண்டு நாவல் ஒன்றை முதல் முதலாக வெளியிட்டுள்ளார். எழுத்துத்துறையிலும் நடிப்புத்துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தேசிய தொலைக்காட்சியின் நேத்ரா அலைவரிசையில் பல நாடகங்களை எழுதியுள்ளார். திருப்பங்கள் (2013), கண்ணாடிப்பூ (2013), இத்தா (2014), பொம்பளைங்க வேல ஆகிய நாடகங்களுக்கு கதை மற்றும் வசன எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இனுச, மாப்பிள்ளை, திருப்பங்கள், பொம்பளைங்க வேல ஆகிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


படைப்புகள்

  • பதுமராகம்