ஆளுமை:பாத்திமா, முகம்மத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா
தந்தை காசீம் முகம்மத்
பிறப்பு
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா, முகம்மத் மட்டக்களப்பு காத்தான்குடியில் பிறந்த எழுத்தாளர். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் எழுதி வருகிறார். இவரது கணவர் முகம்மத் இவர் ஒயு்வு பெற்ற அதிபராவார். இவரின் ஒரே மகன் வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில்ல் கல்வி கற்றுள்ளார். அரச முகாமைத்துவ உதவியாளராக 30 வருடங்கள் கடமையாற்றி தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார். கவிதை, சிறுகதைகள் எழுதும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் பாடசாலை காலத்திலேயே எழுத்துலகில் பிரவேசித்துள்ளார். பாடசாலையில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி ஆசிய நாளிதழ்களில் இவரின் ஆக்கங்கள் 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்துள்ளன. அத்தோடு உள்ளுர் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003ஆம் ஆண்டு, பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004ஆம் ஆண்டும், நா இடற வாய் தவறி (கவிதை) 2009ஆம் ஆண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. இவரது படைப்புக்கள் பெண்களின் பிரச்சினைகளையே பெரிதும் பேசுகின்றன. சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார் பாத்திமா. 30க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

விருதுகள்

கலாபூஷணம்

வளங்கள்

வார்ப்புரு:69919

வெளி இணைப்புக்கள்