ஆளுமை:பவானி, அருளையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி
தந்தை அருளையா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு 1977.01.01
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி, அருளையா (1977.01.01 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் கல்வி கற்று மருத்துவராகப் பணிபுரிகின்றார். இவர் ஆகர்ஷியா என்ற புனைபெயரில் அறியப்படுவர்.

இவர் 13 ஆவது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள், கட்டுரைகள் சரிநிகர், சக்தி, வைகறை, தலித், நான் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பான ‘நம்மைப் பற்றிய கவிதை’ (2007) காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1205 பக்கங்கள் 1
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பவானி,_அருளையா&oldid=315742" இருந்து மீள்விக்கப்பட்டது