ஆளுமை:பரராஜசிங்கம், இராசையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராஜசிங்கம்
தந்தை இராசையா
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1951.09.11
இறப்பு -
ஊர் கரந்தாய்
வகை அண்ணாவியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Rasaiah Pararajasingam.jpg

பரராஜசிங்கம், இராசையா (1951.09.11 -) கரந்தாய், மாசார் எனும் ஊரைச் சேர்ந்த அண்ணாவியார். இவரது தந்தை இராசையா; தாய் சின்னப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க. பாடசாலையில் கல்வி பயின்றார்.கரந்தாய் பகுதியை வதிவிடமாக கொண்டுள்ளார்.1978 ல் பளை ம.வியில் சங்கிலியன் நாடகத்தில் பரநிருபர் பாத்திரத்தில் நடித்தார் . நடிப்பு, வில்லுப்பாட்டு,பாடல், நாடகங்களை பழக்குதல், போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றார். மான் மகன் நாடகத்தை தற்போது பழக்கி வருகின்றார். இவர் பச்சிலைப்பள்ளிப்பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கலைத்தென்றல் விருது பெற்றார்.