ஆளுமை:பரமேஸ்வரி, குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருமதி பரமேஸ்வரி
தந்தை குமாரசாமி
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1949.12.14
ஊர் கிளிநொச்சி, பூநகரி
வகை பல்துறைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரி, குமாரசாமி (1949.12.14 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட பல்துறைக்கலைஞர். இவரது தந்தை குமாரசாமி; தாய் வள்ளியம்மை. இவர் தற்போது கிளிநொச்சி, பூநகரியில் வசித்து வருகின்றார். இவர் தன் ஆரம்பக்கல்வியை வேரவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். பின்னர் இடைநிலைக்கல்வியினை திருநெல்வேலி முத்துதம்பி வித்தியாசாலையில் கற்றார்.

1977 ஆண்டு உதவி ஆசிரியர் நியமனம் பெற்று அத்தாய் முத்துக் குமாரசாமி வித்தியாசாலையில் கற்பித்தார். தொடர்ந்து வேரவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 1982ஆம் ஆண்டு வரை கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றார். பயிற்றப்பட்ட சைவசமய பாட ஆசிரியராக 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1992 ஆம் ஆண்டு வரை வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திலும், வேரவில் இந்து மகா வித்தியாலயத்திலும் கடைமையாற்றினார். 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரிய ஆலோசகாராக கடமையாற்றினார். தொலைக்கல்விப் பாடநெறியூடாகப் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரை சமயப்பாட கற்கை நெறிப் பயிற்சியை வழங்கினார். 2006-12-25 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சைவ மங்கையர் கழகம் HA/4/KL15 ஒன்றினை உருவாக்கி இற்றைவரைக்கும் தலைவர் பதவியுடன் செயற்பட்டு வருகின்றார்.

2006 இல் சைவ சமய விழுமியம் சார்ந்த பாசறைச் செயற்திட்டத்தை தொடர்ந்து 15 நாட்கள் உருத்திரபுரம் சிவன் கோயிலில் நடாத்தினார். இதனால் கவரப்பட்ட நிர்வாகத்தினர் இவரை கெளரவித்தனர்.