ஆளுமை:பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சமூர்த்தி
தந்தை கோதண்டபாணி
பிறப்பு 1948.11.26
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி (1948.11.26 - ) யாழ்ப்பாணம், வண்ணார்ப்பண்ணையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் தமையன் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தியுடன் இணைந்து 33 ஆண்டுகள் நாதசுவரம் வாசித்துள்ளார். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

இவரது இசைஞானத்தைக் கெளரவித்து "நாதஸ்வரசுரபி","நாதஸ்வர இளவரசன்", "நாதஸ்வர இசையருவி" எனப் பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 557-558
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 113


வெளி இணைப்புக்கள்