பெயர் | நீலாபாலன் |
தந்தை | நல்லதம்பி |
தாய் | பூரணிப்பிள்ளை |
பிறப்பு | 1948.14.04 |
ஊர் | கல்முனை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நீலாபாலன், நல்லதம்பி (1948.14.04 - ) கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நல்லதம்பி; தாய் பூரணிப்பிள்ளை. இவர் பூபாலரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த. உயர்தரம் (வணிகம்) வரை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கற்றுக் கொண்டார்.
இவர் பாடசாலையில் பயிலும் காலத்தில் 'தமிழோசை' என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எழுதுகின்றார். இவரின் கன்னிக்கவிதையான அன்னைத் தமிழ் 1965 தினகரன் புதன் மலரில் பிரசுரமானதைத் தொடர்ந்து சுதந்திரன் மாணவர் பகுதியில் அன்னை என்னும் அடுத்த கவிதையை எழுதினார்.
இவரது கவிதைத் தொகுப்புக்களாக இலந்தைப் பழத்துப் புழுக்கள், கடலோரத் தென்னைமரம் ஆகியன ஆகும். இவரது கவியாற்றலுக்காகப் பாவரவு, கவிதை வித்தகன், கவிமணி, தமிழ் மணி, கவி மாமணி, கவிதைப்பரிதி, கலாபூசணம் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 85-96