ஆளுமை:நிஹாஸா, நிஹார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிஹாஸா
தந்தை எம்.ஜே.எம்.நஸார்
தாய் ஸீனத்துல் ஜதீஹா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஹாஸா, நிஹார் கம்பஹா கஹட்டோவிட்டவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை எம்.ஜே.எம்.நஸார்; தாய் ஸீனத்துல் ஜதீஹா. ஆரம்பக் கல்வியை மாவனல்லை ஸாஹிரா கல்லூரியிலும் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் கற்றார். உயர் கல்வியை கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்திலும் பயின்றார். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்துலகில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, சிறுகதை எழுதும் திறமை கொண்ட எழுத்தாளரின் ஆக்கங்கள் எதுவும் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பை 2011ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார் எழுத்தாளர்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிஹாஸா,_நிஹார்&oldid=315420" இருந்து மீள்விக்கப்பட்டது