ஆளுமை:நிலாமதி, ஜீவம் ஜோசப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிலாமதி
தந்தை ஜீவம் ஜோசப்
தாய் ஞானம்
பிறப்பு 1963.05.01
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிலாமதி, ஜீவம் ஜோசப் (1963.05.01) மட்டக்களப்பு பாலமீன்மடுவில் பிறந்த கலைஞர். இவரது தந்தை ஜீவம் ஜோசப்; தாய் ஞானம். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். ஆங்கில ஆசிரியரான இவர் அழகுக்கலை நிபுணருமாவார். அத்தோடு சிறந்த பாடகியாகவும் சிறந்த நடிகையாகவும் அடையாளம் காணப்படுகிறார். இலங்கை உட்பட பல உலக நாடுகளுக்கும் சென்று இசைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். ”கமுநொவன்னமா”என்னும் சிங்கள இசைப்பேழையை வெளியிட்டுப் பலரின் பாராட்டையும் பெற்றார். இதற்காக பல விருதுகளையும் இவருக்கு கிடைத்துள்ளன.