ஆளுமை:நவதர்சினி, கருணாகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவதர்சினி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்

நவதர்சினி, கருணாகரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமாணி பட்டதாரியாவார். நுண்கலைத்துறையில் அரங்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும், Production Operation என்ற விடயத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார். அரங்கியல் எழுத்தாளர், நெறியாளர், தயாரிப்பாளர், நடிகர், ஆய்வாளர் என பன்முகத்திறமைக்கொண்டவர். தூது, கானல் என்ற நிருத்திய நாடக வகைளையும், அபிக்ஞான சாகுந்தலம், முகில்களின் நடுவே ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்தவர். பொய்க்கால், முகில்களில் நடுவே, Mid Summer night Dream, M the Draggle போன்ற நாடகங்களில் நடித்தவர். அன்பளுதூறும் அயலார், ஒதெல்லோ, செவ்விளக்கு, உடையார் மிடுக்கு ஆகிய நாடகத் தயாரிப்பில் அரங்கமுகாமையாளராகப் பணியாற்றியவர். அரங்க விமர்சனங்கள், அரங்க ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு அரங்கக் கட்டுரைகள் என்பவற்றில் தடம்பதித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் அரங்கியல் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி நவதர்சினி, கருணாகரன் வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 16401-10 பக்கங்கள்