ஆளுமை:நபீலா உம்மா, மீராலெப்பை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நபீலா உம்மா
தந்தை மீரா லெப்பை
தாய் லைலத் உம்மா
பிறப்பு 1962.05.19
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நபீலா உம்மா, மீராலெப்பை (1962.05.19) சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மீரா லெப்பை; தாய் லைலத் உம்மா. கமு/சது/சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் போது இலக்கிய மன்றத் தலைவியாக இருந்ததோடு மாதாந்த சஞ்சிகையான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உயர் கல்வியை விஞ்ஞானப் பிரிவில் கற்ற இவர் சமூக சேவையில் ஈடுபட்டு சர்வோதய பாலர் பாடசாலை இணைப்பாளராக இருந்து சம்மாந்துறை மண்ணில் 22 பாடசாலைகளை நிறுவியுள்ளார். இப் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு பாடத்துறைசார் விடயங்களையும் கலை, கலாசாரப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.1990-2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் 25 இற்கும் அதிகமான கையெழுத்துச் சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார். 2002ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இவரின் கல்வி சீர்திருத்தம் என்ற கட்டுரை தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

குறிப்பு : மேற்படி பதிவு நபீலா உம்மா, மீராலெப்பை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.