ஆளுமை:நடராசா, சோமசுந்தரப்புலவர்
பெயர் | நடராசா |
தந்தை | சோமசுந்தரப்புலவர் |
தாய் | சின்னம்மை |
பிறப்பு | 1910 |
இறப்பு | 1988.06.28 |
ஊர் | நவாலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசா, சோமசுந்தரப்புலவர் (1910 - 1988.06.28) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரப்புலவர்; தாய் சின்னம்மை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்றுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்டு கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். இவர் நவாலியூர் சத்தியநாதன் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியதுடன் வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.
இவர் இலங்கை வானொலியின் முதலாவது தமிழ் ஒலிபரப்பாளர் என்ற கருத்திற்குரியவராவார். இவர் கொழும்பு சென் பெனடிக்ற் கல்லூரியிலும் கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும் ஆசிரியராகவும் 1945 - 1948 வரையான காலப்பகுதிகளில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரத் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது முதலாவது மொழிபெயர்ப்பு முயற்சி மஹாகவி இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி என்னும் வடமொழி நூலைத் தமிழுக்கு மாற்றம் செய்தமையே ஆகும். தொடர்ந்து மஹாகவி காளிதாசனின் மேகதூதம் என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு பல நூல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளதோடு பல நாடகங்களை எழுதித் தாமே மேடையேற்றியுமுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 243-254
- நூலக எண்: 300 பக்கங்கள் 53-54